Saturday, 23 December 2017

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிதியுதவி வழங்கினார் சிவநேசன்


சுங்காய்-
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுங்காய் வட்டாரத்திலுள்ள தேவாலயத்திற்கு நிதியுதவி வழங்கினார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன்.

வசதி குறைந்த மக்களுக்கு உதவிடும் வகையிலும் அவர்களும் இப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழவும் ஒரு தொகை பாஸ்டர் மோசஸிடம் சிவநேசன் வழங்கினார்.

அதேவேளையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ அன்பர்களுக்கு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment