சென்னை-
எந்தவோர் அரசியல் கட்சியையும் சாராமல் மக்கள் பிரதிநிதியாகவே களமிறங்குகின்றேன் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஷால்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ஓர் இந்திய குடிமகன் என்பதை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். ஆர்கே நகர் மக்களின் குரலை எதிரொலிப்பதற்காகவே இங்கு நிற்கிறேன்.
நான் அரசியல்வாதியல்ல, நான் யாருக்கும் போட்டியும் அல்ல, எதிரியும் அல்ல.
ஆர்கே நகர் தொகுதியில் மக்களுக்கு தேவையான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அங்குள்ளவர்களுக்கு இந்த மனக்குறை உள்ளது. இளைஞர்கள் முடிவை யாரும் மாற்ற முடியாது. இன்றைய இளைஞர்கள் ஆதரவு நிச்சயம் எனக்கு இருக்கும்.
விஷால் இங்கு வெற்றி பெற்றால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். என் பின்னால் யாரும் இல்லை. இது மக்களுக்காக நான் எடுத்த முடிவு.
இது மாற்றத்தை தரும் தேர்தலாக இது அமையும்.மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். எனவே இங்கு போட்டியிடுகிறேன் என தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் கூறினார்.
No comments:
Post a Comment