Saturday, 9 December 2017

கான்கிரீட் தூண் லோரியை மோதி விபத்து: ஓட்டுனர் பலி


நீலாய்-
இரு கனரக  லோரி மற்றொரு லோரியுடன்  மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் லோரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.  வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 43.6ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தில் அச்சாலை நெரிசலுக்குள்ளானது.

இன்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் கான்கீரிட் தூண்களை ஏற்றிச் சென்ற கனரக லோரியின் பின்னால் மற்றொரு கனரக லோரி மோதியது.  லோரி ஓட்டுனரான முஹாம்மட் முகமட் ஜிடின் (வயது 27) தலைப்பகுதி, உடம்பில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மரணித்தார் என நீலாய் தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் கைருலிஸால் அபு காசிம் தெரிவித்தார்.

இதில் கான்கிரீட் லோரியின் ஓட்டுனர் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 27 மணிநேரத்திற்குப் பின்னர் லோரியில் சிக்கிக் கொண்ட ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபார் சிரம்பான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment