Wednesday, 20 December 2017

பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் மரணம்; இருவர் கைது


ஜொகூர்பாரு-
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிலையத்தில் 'நிழல் உலக தாதா'  என அறியப்படும் ஆடவன் மீது நடத்தப்பட்ட கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய 19, 22 வயதுக்குட்பட்ட ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் போலீஸ்  சிறப்புப் படையினர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காடீர் முகமட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பல பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. பொய்யான தகவல்கள் பகிருவதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது போலீசாரின் கடமையை பாதிக்கச் செய்யும் என்றார் அவர்.

சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரில் வந்த நபர்கள் ஆடவரை தாக்கி, கத்தியால் குத்தியதோடு காரினால் அவரை மோதி தள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
கடுமையான காயங்களுக்கு இலக்கான அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

No comments:

Post a Comment