Monday, 25 December 2017

ஜெயலலிதா இடத்தை கைப்பற்றினார் டிடிவி தினகரன்



சென்னை-
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவையொட்டி அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான  டிடிவி தினகரன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ.ஆக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 21இல் நடைபெற்ற இத்தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில் 'குக்கர்' சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.

அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் 24,651 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகளும் பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 1,417 வாக்குகளும் நோட்டாவுக்கு 2,373 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

பெரும் எதிர்பார்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்திய இந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதாவின் இடத்தை டிடிவி தினகரன் கைப்பற்றியுள்ளார்.

No comments:

Post a Comment