Monday, 25 December 2017

மக்களை மிரட்டிய ராட்சஷ முதலை பிடிபட்டது


குவாந்தான் -
பெக்கானில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3.7 மீட்டர் நீளம் கொண்ட ராட்சஷ முதலையை தீயணைப்பு, மீட்புப் படையினர் வளைத்து பிடித்தனர்.

பெக்கான், பந்தாய் ஆயர் லேலா என்ற இடத்தில் இந்த முதலையின் நடமாட்டம் குறித்து நேற்று பொது மக்கள் தகவல் கொடுத்ததாக பகாங்  தீயணைப்புத் துறை பொது உறவு அதிகாரி அனுவார் ஹசான் கூறினார்.

முதலைகளை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆறு பேர் கொண்ட குழு, இந்த முதலையை தேடும் பணியை மேற்கொண்டது. ஒரு புதருக்குள் பதுங்கி இருந்த முதலையை கண்டு அதனை சுற்றி வளைத்த அவர்கள்,  அதன் வாய், கால்கள், வாலையும் கயிற்றால் கட்டினர். இந்த முதலையை பத்திரமாக மீட்டு வனவிலங்கு, தேசிய பூங்கா பராமரிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment