Wednesday, 6 December 2017

மஇகா வழக்கு: பழனிவேல் தரப்பின் மேல் முறையீடு தள்ளுபடி


புத்ராஜெயா-
மஇகா- சங்க பதிவகம் (ஆர்ஓஎஸ்) ஆகியவற்றுக்கு எதிராக டத்தோஶ்ரீ பழனிவேல் தரப்பினர் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னாள் பத்து தொகுதி மஇகா தலைவர் ஏ.கே.ராமலிங்கம், முன்னாள் பாகான் தொகுதி மஇகா தலைவர் டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம், முன்னாள் சிகாம்புட் தொகுதி மஇகா தலைவர் டத்தோ ராஜு ஆகியோர் இவ்வழக்கை தொடுத்திருந்தனர்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்திருப்பது மஇகா- ஆர்ஓஎஸ்-க்கு சாதகமான முடிவை கொண்டு வந்துள்ளது.

No comments:

Post a Comment