ஈப்போ-
மலேசிய இந்திய தொழில்முனைவர் கழகத்தின் 'பெர்டானா' இளம் தொழில் முனைவர் விருதை பெற்றார் ரகுநாதன் பெருமாள்.
ஃபைபெர் நெட்வோர்க் (Fiber Network) தொலைதொடர்பு நிறுவன நிர்வாக இயக்குனரான இவருக்கு அண்மையில் இவ்விருது வழங்ஜப்ப்பட்டது.
இந்த விருதை பெற்றுக் கொண்ட ரகுநாதனுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். ரகுநாதன் மஇகா கோப்பெங் தொகுதியின் பொருளாளருமாவார்.
விருது பெற்ற ரகுநாதனுக்கு சக இயக்குனர்களான வெங்கா கருப்பையா, மதுரைவீரன், மாரிமுத்து ஆகியோர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment