Wednesday, 13 December 2017

அரச விருதுகளை திரும்ப ஒப்படைத்தார் துன் மகாதீர்- சிலாங்கூர் அரண்மனை உறுதிப்படுத்தியது


ஷா ஆலம்-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா ஆகியோர் இரு அரச விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 7ஆம் தேதி இவ்விருவரும் தங்களது அரச விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளதை சிலாங்கூர் அரச மன்ற செயலாளர் ஹனாஃபிசா ஜாய்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

உரிய  நடைமுறைகள் பின்பற்றி  இவ்விரு அரச விருதுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

பிரிபூமி கட்சியின் தலைவரான மகாதீர் உயரிய அரச விருதான ஶ்ரீ படுக்கா மக்காமா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்), டர்ஜா கெராபாட் ( டிகே) ஆகிய விருதுகளையும் டாக்டர் சித்தி ஹஸ்மா உயரிய அரச விருதான டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர் (டிபிஎம்எஸ்),( எஸ்பிஎம்எஸ்) ஆகிய விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment