புனிதா சுகுமாறன்
ஈப்போ-
கல்வியில் சிறந்து விளங்கிட மாணவர்கள் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் என்ன படித்தோம் என்பதை சிந்தித்து அதற்கேற்ப சிறப்பாக செயல்பட முடியும் என பேராக் மாநில ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைவர் முனைவர் சேகர் நாராயணன் தெரிவித்தார்.
9ஏ பெற்ற வினோத் ஆனந்த்ராஜ் தனது தாயார், எஸ்எம்சி ஒருங்கிணைப்பாளர். |
கல்வி ஒன்று மட்டுமே இந்திய சமுதாயத்தை மேம்படுத்தக்கூடிய வழியாகும். அதில் நாம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வது அவசியமாகும். இன்றைய சூழலில் மாணவர்கள் தங்களின் கல்வி அடைவு நிலையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
9ஏ பெற்ற அர்வின் தனது தந்தையுடன். |
சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களே கல்வியில் சிறந்தவர்களாக உருவெடுக்கின்றனர். பாடத்தை நன்கு கற்று தேர்ந்து அதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வின் போது கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்கி சிறப்பான தேர்ச்சியை பெற முடியும்.
|
7ஏ பெற்ற சர்மிளா மணிமாறன் |
6ஏ பெற்ற காமினி தேவி |
இந்நிகழ்வில் பிடி3 தேர்வில் சிறப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment