Thursday, 14 December 2017

பினாங்கு போலீஸ் தலைவராக டத்தோ தெய்வீகன் நியமனம்


கோலாலம்பூர்-
பினாங்கு மாநில போலீஸ் தலைவராக டத்தோ அ.தெய்வீகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

டத்தோ தெய்வீகன் பதவி நியமனத்தால் கடந்த 33 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் டான்ஶ்ரீ பி.அழகேந்திரா 1977 முதல் 1984 வரை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக பதவி வகித்தார்.

1985ஆம் ஆண்டு போலீஸ் படையில் டி.சி.பி. பதவியுடன் இணைந்த பின்னர் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் புலனாய்வுத் துறையில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தின் தலைவராக பணியாற்றியுள்ள இவர், சிலாங்கூர், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களில் துணை போலீஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment