ஈப்போ-
அதிகாலை வேளையில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சகோதரர் இருவர் மரணமடைந்த வேளையில் கடுமையான காயங்களுக்கு இலக்கான தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் தைப்பிங் அருகில் நிகழ்ந்த வாகனம். பேருந்து ஆகியவை சம்பந்தப்பட்ட இவ்விபத்தில், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த விஜேந்திரன் ராவ் (வயது 16) சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் சங்கர் ராவ் (வயது 13) தைப்பிங் மருத்துவமனையில் உயிரிழந்தார் என தைப்பிங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பிடெண்டன்ட் ரஸ்லான் அப்துல் ஹமிட் கூறினார்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற தந்தை சங்கர் கணேஷ் (வயது 41) எவ்வித காயமும் இன்றி தப்பித்தார். அவரின் மனைவி கோமதி (வயது 36) கடுமையான காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.
கோலாலம்பூரிலிருந்து சுங்கைப்பட்டாணிக்குச் சென்றுக் கொண்டிருந்த இவர்களின் வாகனம், சாலை வழிமறித்து சென்ற லோரியை கடந்து செல்லும்போது சாலையில் நடுவே பயணித்துள்ளனர். அப்போது பேருந்து ஒன்று இவ்வாகனத்தை பின்னால் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment