மிஸ்டர் சிலாங்கூர் 2017 பட்டத்தை கடுமையான பயிற்சிக்குப் பிறகு சாதனைப்
படைத்தார் உடல் கட்டழகர் ஜெய் (வயது 20). தனது சிறு வயதில் உடல் கட்டழகர்
பயிற்சியில் பல சாதனை படைக்க முயற்சி செய்து சமிபக்காலங்களில் பல சாதனைகளை படைத்துக்
கொண்டு வருகின்றார்.
இப்போட்டியின்போது, எதிர்ப்பாராத நிலையில் தனது தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதன்
பிறகு அவர் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டப்பின் மீண்டும் மிஸ்டர் மலேசியா
2018க்கு குறி வைக்கின்றார் ஜெய்.
அதற்கான முறையாக பயிற்சிகளை கடினமாகவும் தன்னம்பிக்கையுடனும்
மேற்கொண்டு வருகின்றேன். இப்போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கு தென் கிழக்கு
ஆசிய உடல் கட்டழகர் மற்றும் தேகக் கட்டுக்கான போட்டிக்கு தகுதி பெற
வாய்ப்புள்ளதாகவும் அதற்கும் நான் குறி வைக்கிறேன் என இளம் கட்டழகர் ஜெய்
கூறினார்.
இதனிடையே, இவர் இருமுறை மிஸ்டர் பாகங் பட்டத்தையும் மிஸ்டர் ஜிம் மலேசியா மற்றும்
பல பட்டங்களை பெற்று குவித்து வருகிறார். உடல் கட்டழகர் மட்டுமில்லாது பகாங் மாநில
முன்னால் கால்பந்து விளையாட்டாளராகவும் இவர் இருந்துள்ளார். “தெக்வாண்டோ” எனும்
தற்காப்பு கலையில் கருப்பு வார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாகங் மாநில விளையாட்டு மன்றத்தின் உடன் ஒப்பந்தத்தில்
கையேழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகங் மாநில விளையாட்டு மன்றம்
ஜெய்யின் பயிற்றுநராக 2013ஆம் ஆண்டு உலக கட்டழகுப் பயிற்றுநர் சோவி ஹசானை
நியாமித்துள்ளனர். சோவி மற்றும் ஜெய் இருவரும் மிஸ்டர் மலேசியாவிற்கு 2018
பட்டத்தை வெல்ல தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இவரது போட்டிக்கு பாராதம்
மின்னியல் ஊடகத்தின் சார்பில் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment