Saturday, 16 December 2017

அடிக்கல் நாட்டப்பட்டது: வெ.7 மில்லியன் செலவில் குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
நீண்ட கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு நாட்டப்பட்டது.

அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளியாக திகழும் குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி இட வசதி காரணமாக புதிய இடத்திற்கு இடம் பெயர நடவடிக்கை எடுக்கப்பட்டு பலஆண்டுகளாக இழுபறி நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், பேராக் மாநில மஇகா தலைவரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ ஆகியோர் தலைமையில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் முதல் கல்லை எடுத்து வைத்தார். அதனை தொடர்ர்ந்து பிரமுகர்களும் வருகையாளர்களும் கல்லை நாட்டினர்.
இந்த அடிக்கல்ல் நாட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், 7 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்படும் இந்த பள்ளி, நவீனமயமாகவும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

தற்போது 120 மாணவர்கள் பயில்கின்ற நிலையில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 200 முதம் 250 மாணவர்கள் வரை இப்பள்ளியில் பயில்வர் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலவாணி, பள்ளி ஆசிரியர்கள், மாநில  மஇகா துணைத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா,  மஇகாவினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment