கோத்தா கினாபாலு-
மெழுகுவர்த்தியில் ஏற்றப்பட்டிருந்த நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனின் செயலால் 6 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. நேற்று 6.30 மணியளவில் பாப்பார், கினாருட் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சிறுவனின் வீடு உட்பட அருகிலிருந்த 6 வீடுகளும் எரிந்தன.
இச்சம்பவம் குறித்து விவரித்த வட்டார தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரி அலோய்சியுஸ் ஸ்டீவன் அமிட், மாற்றுத் திறனாளியான இச்சிறுவன மெழுகுவர்த்தியில் ஏற்றப்பட்டிருந்த தீயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் வீடும் சாம்பலனது.
இச்சம்பவத்தில் எவ்வித உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என அவர் விவரித்தார்.
No comments:
Post a Comment