ஆயர் குரோ பேருந்து நிலையத்தில் சுயநினைவற்ற நிலையில் கிடந்த ஜோகூர்,தங்காக், தாமான் தங்காக் ஜெயாவைச் சேர்ந்த நான்காம் படிவ மாணவன் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணமடைந்தான்.
எம்.அருணாசல்ம் (வயது 16) என அடையாளம் காணப்பட்ட அம்மாணவனை இரவு 9.30 மணியளவில் கண்ட பொது மக்களின் இருவர் மலாக்கா மருத்துவமனையின் அவரச பிரிவில் சேர்த்தனர்.
இது குறித்து கருத்துரைத்த மாநில குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் ஏசிபி கமாலுடின் காசிம், மருத்துவமனையில் சிவப்பு மண்டலப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு முப்பது நிமிடமாக ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் மரணமடைந்தான் என கூறினார்.
இதனிடையே, மரணமடைந்த சிறுவனின் உடல் மீது பிரேத பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக மருத்துவனமை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சவப் பரிசோதனை கூடத்தில் சம்பந்தப்பட்டசிறுவனின் உறவினர்கள் கூடியுள்ளனர்.
இச்சம்பவத்தை குற்றவியல் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அச்சிறுவனின் தாயாரிடம் போலீசார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தாத்தாவின் பணத்தை திருடியதற்காக அச்சிறுவனை குடும்ப உறுப்பினர்கள் என நம்பப்படும் சிலர் தாக்கும் காணொளி காட்சி நேற்று முன்தினம் முதல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் உடலில் சட்டை அணியாத அச்சிறுவனை ரப்பர் குழாய் கொண்டு தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பில் போலீசார் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர் என கமாலுடின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment