கைதொலைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளின் (அப்ஸ்) மூலம் தகவல்களையும் எளிதாக பரிமாறிக் கொள்ளும் அதே வேளையில் அதில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
கணினி யுக மயமாக்கலில் செயலிகளை (அப்ஸ்) உருவாக்குவது, வடிவமைப்பது போன்றவை வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களாக உருமாறுகின்ற சூழலில் அதில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் எனும் நோக்கில் யயாசான் பெமாச்சு கெமாஹிரான் நேஷனல் மலேசியா ஏற்பாட்டில் ஜாவா& அன்ட்ரோய்ட் அப்ளிகேஷன்களை உருவாக்கும் கைத்திறன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
20 நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டு புதிய செயலிகளை உருவாக்கும் நுட்பங்களை கற்றுக் கொண்டனர்.
இப்பயிற்சியில் மாணவர்கள் சொந்த செயலிகளை உருவாக்கவும் இணையம் வாயிலாக தங்களது வருமானத்தை தேடிக் கொள்ளவும் இது வழிவகுக்கிறது என இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் சதீஷ் தெரிவித்தார். நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு இப்பயிற்சி நடத்தப்பட்டது என்றார் அவர்.
செடிக் அமைப்பின் ஆதரவோடு நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இங்கு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் படை துணைத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கினர்.
No comments:
Post a Comment