Thursday, 28 December 2017
ஜனவரி 3இல் தேமு உச்சமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம்?
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியை மீண்டும் கைவசப்படுவது தொடர்பில் அதற்கான திட்டங்களை வகுக்க தேசிய முன்னணியின் உச்சமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகல், வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான வியூகங்கள், தீபகற்ப மலேசியாவில் தேமு சார்பில் எந்த தொகுதியில் எந்த பங்காளி கட்சியைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக களமிறக்குவது போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, தேமு உச்சமன்ற உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் ஜனவரி 12இல் தான் நடைபெறும் என சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment