Sunday, 10 December 2017

பாம்பு தொல்லை: 1,773 புகார்கள் பெறப்பட்டுள்ளன


ஈப்போ-
பாம்பு தொல்லை தொடர்பாக இவ்வாண்டு தொடக்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் 1,773 புகார்கள் பெறப்பட்டதாக கிந்தா வட்டார மலேசிய பொது தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

பிற புகார்களை காட்டிலும் பாம்புகளை உள்ளடக்கிய புகார்களே அதிகம் உள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் 150 புகார்களுக்கு மேல் பெறப்படுவதாக அதன் பேரிடர், நடவடிக்கை அதிகாரி லெப்டினன்ட் ரெய்னர் சைமன் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அதிகமான புகார்கள் கிடைக்கப்பெறும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 201 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை 2 வயது சிறுவனை நாகம் தீண்டியது. பெர்ச்சாம், பண்டார் பாரு புத்ராவில் கிடைக்கப்பெற்ற இப்புகாரே சிறுவனை பாம்பு தீண்டியது தொடர்பான முதல் புகாராகும்.

தங்களது குடியிருப்புப் பகுதி தூய்மையாக பராமரிக்கப்படாத நிலையில் விஷ ஜந்துக்களின்  தீண்டல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை காலை 7.15 மணியளவில் மெத்தை மீது படுத்திருந்த சிறுவன் முகம்மட் இஸ்ஃபயாட்டை 0.9 மீட்டர் நீளம் கொண்ட நாகம் தீண்டியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment