கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் நானே. அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் உறுதிப்பட கூறினார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளர் நான்தான் என கூறியே மக்களுக்கு சேவையாற்றினேன்.
ஆனால் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் என கூறியே களமிறங்கினார். ஆனால் இப்போது நான்தான் வேட்பாளர் என கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிவராஜ், நான்தான் வேட்பாளர் என்பதை உறுதியாக கூற முடியுமா?
'இப்பவும் சொல்லுறேன்.. நான்தான் கேமரன் மலையில் களமிறங்கும் தேமு வேட்பாளர்' என்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment