Wednesday, 8 November 2017

இயற்கை வளங்களை பாதிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை அங்கீகரிக்காதீர்- நஜிப்


தாசேக் குளுகோர்-
யற்கை வளங்களை பாதிக்கும் வகையிலான மேம்பாடுத் திட்டங்களை மேற்கொள்வதை, அங்கீகரிப்பதை பினாங்கு மாநில அரசு தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
இத்தகைய மேம்பாட்டுத் திட்டங்கள் எதிர்காலத்தில் இன்னும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு கடுமையான வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


எதிர்காலத்தில் பேரழிவுகளைத் தடுக்க, வீடு உட்பட அனைத்து மலைப்பாங்கான மேம்பாட்டுத் திட்டங்களையும் பினாங்கு அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது மனநிறைவளிப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.
பிரதமரின் பினாங்கு வருகையின்போது அமைச்சர்கள் டத்தோஶ்ரீ சஹிடான் காசிம், டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய், டத்தோஶ்ரீ மா சியூ கியோங் ஆகியோருடன் பிரதமரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரும் உடன் வந்தார்.

No comments:

Post a Comment