கோலாலம்பூர்-
இந்திய பாராளுமன்றத்திற்கு வருகை புரியுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
'ஜனநாயக நாடு' எனும் புகழ்மிக்க இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு சிறப்பு வருகையாளராக வருகை புரியும்படி இந்திய பாராளுமன்ற தலைமை ஆலோசகர் டாக்டர் பி.இராமசுவாமி விடுத்த சிறப்பு அழைப்பை ஏற்று இன்று இந்தியாவுக்கு செல்கிறார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.
நாளை 17ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு சிறப்பு வருகை புரியவுள்ளதாகவும் 18ஆம் தேதி புவனேஷ்வரில் நடைபெறும் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றவிருப்பதாகவும் டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
மலேசியாவிலுள்ள அனைத்து நிலை இந்தியர்களுக்கும் உதவி புரிந்தும் மலேசிய மக்கள் சக்தி கட்சியை கெளரவிக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment