Tuesday, 7 November 2017

எதிர்க்கட்சி மாநிலம் என்றாலும் உதவிகளை மத்திய அரசு வழங்கும்- டத்தோஶ்ரீ நஜிப்


கோலாலம்பூர்-
எதிர்க்கட்சி மாநிலம் என்றாலும் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பினாங்கு மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசாங்கம் வழங்கும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொறுப்பு பாதுகாப்பு படையுடையது.  அது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது.

பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்ள ஆயுதப் படைத் தலைவர் அங்கு சென்றுள்ளார் என்று கூறிய நஜிப், தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் ஒருங்கிணைந்து, மக்களை மீட்கும் பணிகளை ஆயுதப் படை மேற்கொள்ளும்.

"மனிதநேய அடிப்படையில் நாங்கள் அம்மாநில மக்களுக்கு உதவி வழங்குகிறோம்" என்று மலேசியன் பீல்டு மருத்துவமனைக்கு வருகை மேற்கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், வடக்கு செபராங் பிறை, கிழக்கு செபராங் பிறை ஆகிய இடங்களுக்கு ஆயுதப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment