தென் ஆபிரிக்கா, டர்பன் நகரில் நான்காவது உலகத் தமிழர் மாநாடு இன்று ஆரம்பமானது. சுலு
நாட்டின் அரசர் Zwelithini kaBhekuzulu தலைமையேற்று மாநாட்டை
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மாநாட்டின் பிரதான மேடையில்
மலேசியாவைப் பிரதிநிதித்து மை பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ
எம்.கேவியஸ், மற்றும் மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின்
சம்மேளனம் – மைக்கியின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் கெ.கென்னத்
ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். குத்துவிளக்கை ஏற்றி அரசர் இந்த மாநாட்டைத்
துவக்கி வைத்தார்.
மைக்கியின் தலைவர் டான்ஶ்ரீ
டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் தலைமையில் 21 பேராளர்களும்,
தேசிய நில நிதிக் கூட்டுறவுக் கழகத்தின் இயக்குனர் டத்தோ சகாதேவன்
தலைமையில் 4 பேராளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதோடு, கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர்
பத்திரிக்கை விற்பனையாளர் சங்கத் தலைவர் டத்தோ முனியாண்டியும் இதில் கலந்து
கொண்டார்.
மலேசியா, இந்தியா, மொரிசியஸ், சிங்கப்பூர்,
சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment