சென்னை-
நாம் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான பணத்தை ரசிகர்கள் தருவார்கள்.
அதனால் பயம் இல்லை. ரசிகர்களிடம் வாங்கும்
பணத்துக்கு கணக்கு வைக்க செயலி பயன்படுத்தப்படும். கட்சி தொடங்குவதற்கான முதல் பணி தான் செல்போன் செயலி.
ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 7ஆம் தேதி செயலி அறிமுகம் செய்யப்படும். அரசியல் கட்சி தொடங்க பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. இது ஆரம்ப கூட்டம்தான், இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும்.
சென்னை கேளம்பாக்கத்தில் கமலஹாசன் பிறந்தநாள் விழா, நற்பணி இயக்கத்தின் 39ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் கமலஹாசன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment