கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை பாரம்பரியத் தொகுதி
என கொக்கரித்துக் கொண்டிருக்கும் மஇகா, தனது சுங்கை சிப்புட்
நாடாளுமன்றத் தொகுதியின் பரிதாப நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என மைபிபிபி கட்சியின்
தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் வலியுறுத்தினார்.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதி சுங்கை சிப்புட் மட்டுமே
ஆகும்.
ஏனெனில் அங்கு மஇகாவின் தேசியத் தலைவர்கள் பதவி வகித்த தொகுதியாகும்.
ஆனால் அங்கு கடந்த இரு தவணைகளாக மஇகா போட்டியிட்டு தோல்வி கண்டு வருகிறது.
அந்த தொகுதியை மீட்டெடுக்க வழி காணாத மஇகா, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை 'சுயேட்சை தொகுதி'யாக அறிவித்து விட்டு, இப்போது அந்த தொகுதி மஇகாவின்
பாரம்பரியத் தொகுதி என கூப்பாடு போடுவது வேடிக்கையாக உள்ளது.
கைநழுவி போன சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை
மீட்டெடுக்க வழிகாணாத மஇகா, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக
போட்டா போட்டி நடத்துவது வீண் வேலையாகும் என மைபிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம்
பேசுகையில் டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment