Friday, 24 November 2017

ஜசெக சிஇசி உறுப்பினராக பேராசிரியர் இராமசாமி நியமனம்

கோலாலம்பூர்-
ஜசெக தேர்தலில் தோல்வி அடைந்த பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கட்சியின் மத்திய நிர்வாக செயற்குழு (சிஇசி)உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் தேர்தலில் 359 வாக்குகள் பெற்று பேராசிரியர்  தோல்வி அடைந்தார். 1,356 பேராளர்கள் வாக்களித்த தேர்தலில் பேராசிரியர் இராமசாமியின் தோல்வி இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் எதிரொலித்த இந்திய சமுதாயத்தின் அதிருப்தியை உணர்ந்துள்ள கட்சி தலைமைத்துவம் பேராசிரியர் இராமசாமியை மத்திய நிர்வாக செயல்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது.

No comments:

Post a Comment