Friday, 3 November 2017

மேம்பாட்டுப் பணிகளே வெள்ளத்திற்கு காரணம்- டத்தோஶ்ரீ தெங்கு அட்னான்

கோலாலம்பூர்-
அங்காசாபுரிக்கு அருகிலான கூட்டரசு நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்படுவதற்கு அங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளே  காரணம் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு  மன்சோர் குறிப்பிட்டார்.

வெள்ளம் ஏற்பட்டதற்கு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த கன மழையால் 86 மில்லிலிட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் 50 முதல் 60 மில்லிமீட்டர் மழையை விட அதிகமானது ஆகும். இதனாலே வெள்ளம் ஏற்பட்டது.
செத்தியவங்சா- பந்தாய் எக்ஸ்பிரஸ்வே, செளவுத் சிட்டி கட்டடம் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலை பணி மேற்கொள்ளப்படுவதால் மழை பெய்தபோது வெள்ளம் ஏற்பட்டடது.

ஆயினும் இந்த பணி மேற்கோள்ளும் மேம்பாட்டு நிறுவனமான ஸ்பிரிண்ட், மலேசிய நெடுஞ்சாலை இலாகா ஆகியவற்றிடம் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக மக்களவையில் ஹீ லொய் சியான் (பிகேஆர்-பெட்டாலிங் ஜெயா செலாத்தான்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் கூறினார்.

மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் கால்வாய்களின் தரத்தை மேம்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment