சுங்கை சிப்புட்-
வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில மக்களுக்கு உதவும்படி மத்திய அரசாங்கத்திடம் அம்மாநில முதல்வர் விடுத்துள்ள கோரிக்கையை சமூக ஊடகங்களில் பலர் விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.
தற்போது ஏற்பட்டுள்ளது அரசியல் போட்டியல்ல; இயற்கை சீற்றம். அதனை புரிந்து கொண்டு முதல்வர் லிம்மை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கப் படைகளில் உதவியை முதல்வர் லிம் நாடியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து இலாகாக்களும் உள்ள நிலையில் முதல்வர் லிம்மின் கோரிக்கையை விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது.
இத்தகைய பேரிடர் சம்பவத்தின்போது மக்களுக்கு உதவுவதையே முதன்மையாக கருத வேண்டுமே தவிர, அதிலும் அரசியல் கலந்து குளிர்காய நினைக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment