சென்னை-
'தினத்தந்தி'யின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இச்சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. இதனையடுத்து கருணாநிதியின் இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment