Thursday, 16 November 2017

புந்தோங் தொகுதி மைபிபிபி வசமாகலாம்?


ரா.தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சியைச் சேர்ந்த  டத்தோ நரான் சிங் போட்டியிடலாம் என கணிக்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின்போது புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிட்டது. ஆயினும் அத்தேர்தலில் மஇகா வேட்பாளர்  தோல்வியடைந்ததால் இத்தொகுதி எதிர்க்கட்சி வசமானது.

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இத்தொகுதியை கைப்பற்ற இலக்கு கொண்டுள்ள நிலையில் இங்கு களமிறங்கி சேவையாற்றி வருகின்ற மைபிபிபி கட்சியின் பிரதிநிதியான டத்தோ நரான் சிங் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என கணிக்கப்படுகிறது.

ஏனெனில் மஇகாவை பிரதிநிதித்து களமிறங்குபவர்களுக்கு உள்ளூர் மஇகா பிரதிநிகள் ஒன்றிணைந்து சேவையாற்றாதது, கட்சிக்குள்ளேயே போட்டா போட்டி போன்ற பிரச்சினைகளால் இங்கு மாற்றுக்கட்சியினர்  போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாம்.

No comments:

Post a Comment