Friday, 3 November 2017

உலக சினிமாவிலும் வெற்றிநடைபோடுகிறார் தனுஷ்



சென்னை-
பிரபல நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக சினிமாவிலும் வெற்றிநடைபோடுகிறார். இவருக்கு உலக சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் 'வேலையில்லா பட்டதாரி-2' போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பெரும்பாலான நாடுகளின் வெளிநாட்டு உரிமையை சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment