Tuesday, 7 November 2017

'மகாதீர் அழைத்தார்; ஆனால்...?' - டான்ஶ்ரீ கேவியஸ்


கோலாலம்பூர்-
எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வருமாறு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் கொள்கைகளை பின்பற்றுபவன் என்பதால் தேசிய முன்னணியை விட்டு விலகும் எண்ணம் தமக்கில்லை என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.
நான் எப்போதுமே கொள்கைகளை பின்பற்றுபவன். அதன் அடிப்படையிலேயே மைபிபிபி கட்சியை வழிநடத்தி வருகின்றேன்எக்காலத்திலும் கொள்கைகளை விட்டு கொடுத்து வாழ்வதை அனுசரிக்க முடியாது.
பிரதமராக பதவி வகித்த காலத்தில் என்னை துணை அமைச்சராக்கியவர் துன் மகாதீர் ஆவார். இருந்தபோதிலும் தேசிய முன்னணி மீதான எனது விசுவாசம் எள்ளளவும் குறைந்ததில்லை.
அதனாலேயே எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வருமாறு துன் மகாதீர் விடுத்த அழைப்பைக் கூட புறக்கணித்து விட்டேன் என டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.

No comments:

Post a Comment