ஜோகூர்பாரு-
மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற
பரிசுதொகையை பினாங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஜோகூர் டாருல் தக்ஷிம் (ஜேடிதி) கால்பந்து குழு முன்வந்துள்ளது.
ஜோகூர் பட்டத்து இளவரசர் கட்டளைபடி இந்த உதவி நடவடிக்கை
வழங்குவதை கொள்கையாக கொண்டுள்ள ஜோகூர் கால்பந்து குழு, இதற்கு முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகாங், கிளந்தான்
மாநிலங்களுக்கும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சபா மாநிலத்திற்கு உதவிகளை வழங்கியுள்ளது.
மாநில அரசும், ஜேடிதி கழகமும்
பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்
2017க்கான மலேசிய கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற பரிசு தொகையை பினாங்கு
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஜேடிதி கழகமும் அதன் விளையாட்டாளர்களும்
முடிவெடுத்துள்ளனர்.
இந்த தகவலை ஜேடிதி கிளப்பின் தலைவர் துங்கு துன்
அமினா சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் செளர்ட்டன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment