Thursday, 9 November 2017

சிரம்பான் மார்க்கெட்டில் தீ: திட்டமிட்ட சதி

சிரம்பான் -
கடந்த செப்டம்பர் மாதம் சிரம்பான் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீச்சம்பவம்  திட்டமிட்ட சதியாகும் என மாநில தீயணைப்பு, மீட்புப் படைத் தலைவர் நோராசம் காமீஸ் குறிப்பிட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம் இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளது. அந்த மேல்மாடியிலுள்ள கடை ஒன்றில் பெட்ரோல் ஊற்றப்பட்டதற்கான தடயம் உள்ளதாகவும் அங்குள்ள கடைகளின் அருகிலுள்ள குப்பை தொட்டியில் திட எரிபொருள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
"யாரோ வேண்டுமென்றே இப்பகுதியில் தீ வைத்துள்ளார். அதனால் அக்கட்டடத்தின் மேற்பகுதி முற்றாக அழிந்தது. இது குறித்து மாநில மந்திரி பெசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த தீச்சம்பவத்தில் 392 கடைகள் முற்றாக அழிந்தன என்பது குறிப்பிடத்தக்க்கது.

No comments:

Post a Comment