திருடன் ஒருவனின் கைவரிசையால் பெரும் நஷ்டத்தை அடையும் வணிகர்கள் 'கதவுகளை உடைக்காதே' என அவனிடம் மன்றாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கறுப்பு நிறச் சட்டை, தலைகவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து நள்ளிரவு, அதிகாலை வேளையில் கடைகளின் கதவையும் பூட்டையும் உடைத்து திருடும் கொள்ளையனால் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக வணிகர்கள் புலம்புகின்றனர்.
பண்டார் புக்கிட் திங்கி, தாமான் பாயூ பெர்டானா, பண்டார் பொத்தானிக், செளதர்ன் பார்க், தாமான் செந்தோசா ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த மூன்று மாதங்களில் 100க்கும் மேற்பட்ட நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களது கடையின் கதவையும் பூட்டையும் உடைத்து திருடப்படுவதால் கதவுகளுக்கும் பூட்டுகளுக்குமே அதிகம் செலவிடுவதாகவும் இதனால் வருமானத்தைக் காட்டிலும் இதற்கே அதிகம் செலவாகிறது என புலம்பும் வணிகர்கள், திருடனிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
"கடைகள் திறந்துதான் உள்ளன. உள்ளே எந்த பொருளும் இல்லை. தயவு செய்து கதவுகளை உடைக்காதே" என வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை தங்களது கடைகளில் தொங்கவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment