Wednesday, 29 November 2017
உயிரை 'பணயம்' வைத்த சிறுவர்களின் மூன்று மணி நேர பேருந்து பயணம்
பெய்ஜிங்-
பட்டணத்தில் வேலை செய்யும் தங்களது பெற்றோரை பார்க்க விரும்பிய 2 சிறுவர்கள் பேருந்துக்கு அடியில் பதுங்கி கொண்டு 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
பள்ளியிலிருந்து வெளியேறி பெற்றோரை காண குவாண்டோங் மகாணத்திற்கு செல்ல முயன்ற 8 வயதுடைய இரு சிறுவர்கள், பணம் இல்லாத காரணத்தினால் பேருந்துக்கு அடியில் ஒளிந்து கொண்டனர்.
புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது இரு சிறார்கள் பேருந்துக்கு அடியில் ஒளிந்து கொண்டிருப்பதை ஊழியர்கள் கண்டு அவர்களை மீட்டனர்.
பேருந்துக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல் கரும்புகையும் சேரும் சகதியுமாக இருந்தது. பின்னர் இச்சிறுவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment