Friday, 24 November 2017
தடம் புரண்டது சரக்கு ரயில்- சேவைகள் பாதிப்பு
கோலாலம்பூர்-
சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் கிள்ளான் பள்ளதாக்கு முழுவதுக்குமான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் பேங்க் நெகாரா நிலையத்தில் 12பெட்டிகளைக் கொண்ட ரயில் தடம் புரண்டதால் பேங்க் நெகாரா, புத்ரா, சிகாம்புட் ஆகிய நிலையங்களுக்கான சேவை இடம்பெறவில்லை.
ஆதலால் எம்ஆர்டி, எல்ஆர்டி ஆகிய ரயில் சேவைகளை பயன்படுத்துமாறு பயணிகளை இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பத்துகேவ்ஸ்-கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் செந்தூல் நிலையம் முன்பு நிற்கும் பேருந்துகளின் மூலம் கேஎல் சென்ட்ரலுக்கு செல்லலாம்.
இதனை சீரமைக்க மூன்று நாட்கள் பிடிக்கும் என டிவிட்டர் அகப்பக்கத்தின் மூலம் கேடிஎம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment