Tuesday, 7 November 2017

சோதனையை கடந்து தேர்வு எழுதிய எஸ்பிம் மாணவர்கள்




பட்டர்வொர்த்-
பினாங்கு, சுங்கை டுவாவில் அமைந்துள்ள டத்தோ ஹஜி அமாட் சைட் இடைநிலைப்பள்ளியில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இங்கு தேர்வு எழுதும் 150 எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்வதற்கு அங்குள்ளவர்களின் உதவியின் மூலம் லோரியில் ஏறி வந்தனர்.


24 மணிநேர தொடர் மழையின் காரணமாக, இப்பள்ளியில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எவ்வித பாதிப்பும் இல்லாமல் அனைத்து எஸ்பிஎம் மாணவர்களும் லோரியின் உதவி மூலம் தேர்வு அறைக்கு சென்றடைந்துள்ளனர். லோரியிலிருந்து இறங்கியுடனே, அங்கு வைக்கப்பட்டிருந்த மேசையின் வாயிலாக ஏறி சென்றே தேர்வு அறையை சென்றடைந்துள்ளனர்.


எஸ்பிம் மாணவர்களுக்கும் இப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இது மிகப் பெரிய சோதனையாகவும் வேதனையாகவும் அமைந்தது. கடந்த 2003ஆம் ஆண்டிலும் இப்பள்ளியில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆனால், இம்முறை ஏற்பட்ட வெள்ளமே மிக மோசமாக உள்ளது என்று ஓர் ஆசிரியர் கூறினார்.


பினாங்கில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டிருந்தாலும், திட்டமிட்டப்படியே இம்மாநிலத்திலுள்ள எஸ்பிஎம் மாணவர்கள் இன்று முதல் தேர்வில் அமர்ந்தனர்.





No comments:

Post a Comment