Thursday, 23 November 2017
அதிகார துஷ்பிரயோகங்கள் அனைத்தும் விசாரிக்கப்படும்- லிம்
பெட்டாலிங் ஜெயா-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தால் அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் அனைத்து விசாரிக்கப்படும் என ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
முன்பும் இப்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் மீது விசாரணை நடத்தப்படும் என இளம் தலைமுறைகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் லிம் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றினால் தவறு இழைத்துள்ள துன் மகாதீர் மீது விசாரணை மேற்கொள்ளப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் துன் மகாதீர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிகழ்வின்போது லிம் கிட் சியாங் அருகில் துன் மகாதீர் அமர்ந்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment