சென்னை-
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'தனி ஒருவன்' வெற்றி படைப்பிற்கு பின்னர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள படம் 'வேலைக்காரன் .' இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'கருத்தவனெல்லாம் கலீஜா' என அனிருத் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றந நிலையில் தற்போது இப்படத்தின் 2ஆவது பாடலான 'இறைவா' பாடல் சற்று நேரத்திற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
No comments:
Post a Comment