Saturday, 11 November 2017

‘சீண்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்; நான் சீண்ட ஆரம்பித்தால்...'- டான்ஶ்ரீ கேவியஸ் எச்சரிக்கை


கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் நானே. நான் போட்டியிட்டால் மட்டுமே அந்த தொகுதியை தேசிய முன்னணி தற்காத்துக் கொள்ள முடியும்ஆதலால் என்னை சீண்டி பார்க்க வேண்டாம் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில்  கடந்த ஈராண்டுகளுக்கும்  மேலாக களமிறங்கி சேவையாற்றி வருகின்றேன். இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு கண்டு வருவதோடு மக்களுக்கான சேவையை எவ்வித சலனமும் இன்றி ஆற்றி வருகின்றேன்.
அவ்வகையில் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்தவனும் நான்தான்; மக்களின் ஆதரவை பெற்றவனும் நான்தான். இங்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் எனக்கு மட்டுமே உண்டு.
எனது சேவைகளை நோட்டமிட்டு அதற்கு மாற்றாக சேவைகளை ஆற்றி வரும் மஇகா, என்னை சீண்டி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
என்னை சீண்டி கொண்டிருப்பதை நிறுத்தி கொள்ளுங்கள், இல்லையேல் நான் சீண்ட ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் என இங்கு மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலலை உறுப்பினர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment