ஈப்போ-
பேராக் மாநிலத்திலுள்ள இந்தியத் தொழில் முனைவர்களுக்கு வழிகாட்டும் தளமாக பேராக் இந்தியர் வர்த்தக சபை (பிஐசிசி) எப்போதும் திகழும் என அதன் தலைவர் சுல்தான் அப்துல் காதீர் தெரிவித்தார்.
இந்தியர்கள் தொழில் ரீதியில் முன்னேற்றம் காணும் வேளையில் அவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக திகழும் பிஐசிசி, இளம் தொழில் முனைவர்களை உருவாக்குவதில் களமிறங்கியுள்ளது.
அதற்கேற்ற வகையில் இளைஞர்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் சொந்த தொழில் புரிபவர்களை ஊக்குவித்து அவர்களை மேம்படுத்துவதையும் இச்சபை கடமையாகக் கொண்டுள்ளது. என இங்கு பிஐசிசி பணிமனை மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பு நிகழ்வின்போது அவர் கூறினார்/.
இந்த நிகழ்வில் இச்சபையின் முன்னாள் தலைவர் எம்.கேசவன், வழக்கறிஞர் மதியழகன், உட்பட சபை நிர்வாக செயலவையினர், உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment