புத்ராஜெயா-
'டிஎன்பி நிறுவனம் எதிர்நோக்கியுள்ள நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு
மின்சார விலை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்திருப்பதாக' சமூக
வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என நீர் வளம், பசுமை தொழில்நுட்பம்
அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வதந்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸைனி உஜாங் ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
மின்சாரம் விலை அதிகரித்துள்ளதாக பரவும் இந்த தகவல் கடந்த
2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்த கூற்றாகும் என்றார் அவர்.
பொய்யான தகவலை பரப்பும் தரப்பினர் மீது தகவல், பல்லூடக அமைச்சு
தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment