Tuesday, 7 November 2017

சமூகத்தின் மனசாட்சியாக பத்திரிகைகள் விளங்கிட வேண்டும்-பிரதமர் மோடி


சென்னை-
தொழில் புரட்சியை ஏற்படுதியுள்ள பத்திரிகை துறை சமூகத்தை மனசாட்சியாக திகழ வேண்டும். அரசாங்கத்தையே மட்டுமே சுற்றி இருப்பதை தவிர்த்து ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்து நிற்கும் துறையாக பத்திரிகைகள் விளங்கிட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 தற்போதிய பத்திரிகைகள் செய்திகளை மட்டும் தாங்கி வருவதில்லை. புதிய திசைகளையும் புதிய உலகையும் காட்டும் கருவியாக பத்திரிகைகள் உள்ளன.
பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் அரசாங்கத்தையே சுற்றியிருக்கும் செய்திகளாக இல்லாமல் 125 கோடி மக்களையும் சுற்றியிருக்கும் செய்திகளை வெளியிட வேண்டும்.

மக்களின் கைகளில் தவுழுகின்ற பத்திரிகை சமூகத்தில் மனசாட்சி பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். தான் தரக்கூடிய ஒவ்வொரு செய்தியிலும் நம்பக்கதன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். தன்னலம் கருதாமல் நடுநிலையோடு பத்திரிகைகள் செயல்பட வேண்டும் என "தினத்தந்தி" நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment