சென்னை-
'தினத்தந்தி' பவள விழாவில் நடிகர் ரஜினிகாந்த், உட்பட பல பிரபலங்கள்
கலந்து கொண்டனர். மேடைக்கு கீழே உள்ள முதல் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
பிரதமர் மோடி ரஜினிகாந்தின் கையைப் பிடித்து நலம் விசாரித்தார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரசாந்த், பிரபு, சிவக்குமார், அர்ஜுன், சூர்யா,
கார்த்தி, தனுஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கவிஞர்
வைரமுத்து, கலைப்புலி எஸ்.தாணு, ஜாக்குவார் தங்கம், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும்
விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment