இது அரசுக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முன் அறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, நாராயணபுரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரம் ஆகாது.
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கும் நீர் வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரல் எழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவவேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம்.
இவ்வாறு கமல் தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment