இந்நிகழ்வில் கலந்து கொண்ட கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் மஸ்துரா சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார். அவர் தமதுரையில், கடந்தாண்டு இடைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்த இந்தியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சமுதாயத்திற்கான என்னுடைய சேவை தொடர்ந்து கொண்டிருக்கும். அவர்களுக்கான சேவையை வழங்க நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்.
இதனிடையே, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல திட்டங்கள்ம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய சமுதாயத்திற்கான பல திட்டங்களையும் அறிவித்துள்ளார். ஆதலால் தேசிய முன்னணிக்கான இந்தியர் ஆதரவு தொடரப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். கோலகங்சார் தொகுதி மஇகா தலைவர் செல்வராஜா, முன்னாள் தலைவர் டத்தோ பூபாலன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களும் உதவிநிதியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment