ரா.தங்கமணி
ஈப்போ-
யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை ஊடகங்களிடம் அறிவிக்க பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை சேகரிக்க முடியாத அவலநிலைக்கு ஊடகத்தினர் தள்ளப்பட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் தத்தம் பள்ளிகளின் ஊடகங்களிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவ்வாண்டு தங்களது பள்ளி தேர்வு முடிவுகளை ஊடகங்களிடம் அறிவிக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களிடையே காணப்படும் தாழ்வு மனப்பான்மை நிலையை தவிர்ப்பதற்காக இத்தகையதொரு நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது என இந்த கட்டுபாடுக்கு காரணம் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment