Monday, 13 November 2017

கொட்டும் 'மழை'யில் தீபாவளிக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மலேசிய சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த தேசிய நிலையிலான தீபாவளி கொண்டாட்டத்தை கொட்டும் 'மழை'யில் கொண்டாட வேண்டிய சூழலுக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் 'மழை' இன்று கொண்டாடப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. மாலை 5.00 மணியளவில் பொழிய தொடங்கிய 'மழை' தீபாவளி கொண்டாட்டத்தின்போது தொடர்ந்தது.

இதனால் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பலர், தங்களது கைகளில் குடைகளை ஏந்தியவாறே நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினரின் சில நடவடிக்கைகள் மக்களிடையே அசெளகரியத்தை ஏற்படுத்திய போதிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது தலைவர்களுக்கான ஓர் அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், சுற்றுலா,  பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ், பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, மாநில அரசு செயலாளர் டத்தோ மாட் புவான் நயான், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி,  சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment